அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு

அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரி யில், உதவி பேராசிரியர் உள்ளிட்ட, 61 காலி இடங்களுக்கு, பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரியான, குரோம்பேட்டை, எம்.ஐ.டி.,யில், 61 காலி இடங்களை நிரப்ப, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் பதவிக்கு, 32 பேரும், ஆசிரியர் அல்லாத பணியாளர் பணிக்கு, 29 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். 


ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கணினி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், அப்ளைட் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு, காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன.இன்ஜி., படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் பதவிக்கு, ஜூலை, 4க்குள் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விபரங்களை, https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.