தமிழக மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சாரண சாரணியர் விழாவில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 

தமிழக மாணவர்கள் அனைவரும்  நீட் தேர்வில் வெற்றி பெறுகிற வகையில் அடுத்த மாதம் முதல் 412 பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கும். 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் ஸ்கில் ட்ரெயின்ங் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும். 12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.