B.E., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரியில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 


514 கல்லுாரிகளிலிருந்து இதுவரை 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 11,164 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. காலை 9:00 மணிக்கு மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கும், அதை தொடர்ந்து லெதர், பிரின்டிங் பிரிவுக்கும், மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை கெமிக்கல், 3:00 மணி முதல் 4:30 மணி வரை டெக்ஸ்டைல் பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியது: கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றனர்.