பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு 5.50 லட்சம் இலவச,'லேப்டாப்' ; ரூ.758 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச,'லேப்டாப்' வழங்கப்படுகிறது. இத்திட்டம், 2011 - 12ல் துவக்கப்பட்டது. 2016 - 17ம் ஆண்டு வரை, 37.29 லட்சம் லேப்டாப்கள், 5,520 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு, 5.43 லட்சம் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 42 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.50 லட்சம் லேப்டாப் வழங்க, 758 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விபரம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.