'ஸ்பீடு இன்ஸ்டிடியூட்' நடத்திய இலவச 'நீட்' பயிற்சி ; 1,291 மாணவர்கள் தேர்ச்சி!!

'ஸ்பீடு இன்ஸ்டிடியூட்'நடத்தியஇலவச 'நீட்' பயிற்சிமூலம்1,291 அரசு,உதவிபெறும்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இந்நிறுவனம் 2002ல் துவங்கப்பட்டு அனைத்து வகை மருத்துவ போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கிறது.மூன்று ஆண்டுகளுக்கு 100 பள்ளிகளில் இலவசமாக'நீட்'தேர்வு பயிற்சியை அளிக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குபயிற்சி அளிக்கப்படுகிறது.412 பள்ளிகளில் செயற்கைக்கோள் பயிற்சி மையங்கள் அமைத்துள்ளோம்.

'ஸ்மார்ட்' கணினி வகுப்புகள் அமைத்து வல்லுனர்கள் மூலம்உண்டு, உறைவிட பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி தருகிறோம். மாணவருக்குஅரசு வழங்கிய இலவச 'லேப்டாப்'பில் புத்தகத்தை டிஜிட்டல் வடிவில் கொடுத்துஉள்ளோம். அலைபேசி செயலி மூலம்வினாக்களை இணைத்து மாணவர்கள்வீட்டில் இருந்தவாறே மாதிரி தேர்வில் பங்கேற்கலாம். 'நீட்' தேர்வின் முக்கிய அம்சமான எம்.சி.க்யூ., என்ற வினா வங்கி தயாரித்து தினமும் தேர்வு நடத்துகிறோம். அரசிடம்நிதி பெறாமல் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.