'நிபா'ஆக மாறிய 'டெங்கு' தடுப்பு பிரிவு

விருதுநகர்: கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள 'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பிரிவு, 'நிபா' தடுப்பு பிரிவாக மாறி
உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இரு ஆண்டுக்கு முன் 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 18 பேர் இறந்தனர். இதன் அருகே உள்ள திருநெல்வேலி, மதுரை மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் 'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.தற்போது கேரளாவில் 'நிபா 'வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், டெங்கு தடுப்பு பிரிவுகளை 'நிபா' தடுப்பு பிரிவாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.