தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்

தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது,


அந்தவரிசையில் ரூ.509/- மற்றும் ரூ.799/- திட்டத்தில்

அசத்தலான டேட்டா சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேட்டா ஆஃபர் பல்வேறு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, அறிமுகமான ஜியோ  போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது. மாதத்திற்கு ரூ.199/- என்கிற விலையை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு  வைப்பு நிதியும் தேவையில்லை. குறிப்பாக டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற  குரல் அழைப்புகளையும் பயனராகில் அனுபவிக்கலாம். மேலும் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.509 மற்றும் ரூ.799 திட்டங்களைப் பற்றி விரிவாக
பார்ப்போம்.

ஜியோ ரூ.509/- திட்டம்:

ஜியோ அறிவித்துள்ள ரூ.509/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 112ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.509/- திட்டத்தின் அம்சங்கள்:

ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரை இந்த திட்டத்தில் பெற முடியும்.

ஜியோ ரூ.799/- திட்டம்:

ஜியோ அறிவித்துள்ள ரூ.799/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 140ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



ஜியோ ரூ.799/- திட்டம்:

ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரை இந்த திட்டத்தில் பெற முடியும்.

2ஜிபி டேட்டா:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.448/-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்பு ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது