சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்து பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியுள்ளனர்.
இதில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 4,138 மையங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்தன.
இதையடுத்து சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in ஆகிய இணையதளங்களில் நாளை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.