25 வயதுக்கு மேற்பட்டோர் இனி நீட் தேர்வு எழுத முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்



புது தில்லி: இனி வரும் ஆண்டுகளில், 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத முடியாது என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் தொடர்ந்த வழக்கில், தில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை. இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்.
நீட் தேர்வு குறித்து ஜனவரி 22ம் தேதி மருத்துவ கவுன்சில் சார்பில் சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிக்கையை இன்று தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.