அரசு பள்ளியில் கையடக்க கணினியில் தேர்வு

அரசு பள்ளியில் கையடக்க கணினியில் தேர்வு
அரசுப்பள்ளிகளில், முதன் முறையாக கையடக்க கணினியில் பொதுத் தேர்வு துவங்கியது. புதிய கல்வித்திட்டத்தில், ஜன., முதல், 13 மாவட்டங்களை சேர்ந்த, 173 அரசுப் பள்ளிகளில் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியில், கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. 


இந்த புதிய முறையில், பயின்ற மாணவர்களுக்கு நேற்று, கையடக்க கணினி யில் முதன் முறையாக ஆண்டு இறுதி பருவத் தேர்வு துவங்கியது.வரும், 12 வரை பருவமுறை தேர்வு நடக்கிறது. இதுவரை, 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. 40 மதிப்பெண்கள் அக மதிப்பீடாக வழங்கப்படும். இந்த ஆண்டு முதல், 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும். மீதம், 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினியில் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். ஆசிரியரின் கணினியில் இருந்து, மாணவரின் கையடக்க கணினிக்கு தேர்வு நேரத்தில் வினாக்கள் அனுப்பப்படும். மாணவர் பெயர், புகைப்படத்துடன் கூடிய பக்கத்தை, 'கிளிக்' செய்தால், கேள்விகள் தோன்றும். இதற்கு பதிலை தேர்வு செய்து டைப் செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில், 10 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவர்கள் இந்த புதிய முறையில் நேற்று தமிழ் தேர்வு எழுதினர்.