24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்: யு.ஜி.சி. வெளியீடு

நாடுமுழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், விரைவில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்நோக்கில் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் அங்கீகாரமின்றி 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 8 பல்கலைக்கழகங்கள் தலைநகர் தில்லியில் செயல்பட்டுவருகின்றன. மேலும் பிகார், ஒடிஸா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை.
உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாதில் இயங்கும் 2 பல்கலைக்கழகங்கள் போலியானவை. மேலும், புதுச்சேரியில் இயங்கும் 'ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன்' என்ற பல்கலைக்கழகம் போலியானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பல்கலையில் படித்து பட்டம் வாங்கினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். என்று யுஜிசி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.