‘ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் கையெழுத்து மோசமாகும்‘

‘ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற தொடுதிரை கருவிகளை, இன்றைய குழந்தைகள் அதிகளவில் பயன்படுத்துவதால், அவர்களால் பென்சிலை சரியாக பிடித்து பயன்படுத்த முடிவதில்லை’ என்று பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்!

தொடர்ந்து தொடுதிரை கருவிகளை பயன்படுத்தும் குழந்தைகளின் விரல்களில், தசை இயக்கம் முறையாக வளர்ச்சியடையாததால், அடிப்படை இயக்கத் திறனில் குறை ஏற்படுகிறது. இதனால், பென்சிலை முறையாக பிடித்து பயன்படுத்த இயலாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதை பள்ளிகளில் பார்க்கமுடிகிறது என்று தெரிவிக்கிறார், பிரிட்டனைச் சேர்ந்த குழந்தை மருத்துவ நிபுணர் சாலி பய்னே.
மேலும், தொழில்நுட்பக் கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு கையெழுத்து சரியாக அமைய பல காலம் ஆகிறது என்கிறார், லண்டனைச் சேர்ந்த மருத்துவர் மெல்லிஷ்சா ப்ருன்டி!
தொழில்நுட்ப சாதனங்களுக்கு பதிலாக, தசை பிடிமானத்தை அதிகரிக்க செய்யும் வகையிலான விளையாட்டு பொருட்களை பயன்படுத்த, குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது பிரிட்டனைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல...!