தகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல்விமுறை மத்திய அரசு தகவல்...

கணினியே இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு.புதிய
பாடத்திட்டமும் பொய்த்து போனது ..
 
அறிக்கையில் மட்டும் கணினி பாடம் அரசுப்பள்ளியில் இல்லாத நிலை இன்றும் !
மடிக்கணினி மட்டும் இலவசமாக கொடுக்கும் அரசு அதற்கான கல்வியை மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்???
       மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரியது என்ற போதிலும் மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை  வழங்கினால் மடிக்கணினியை தனது சுய சம்பதியத்திலே  வாங்கும் நிலையை தமிழக அரசு என்று ஏற்படுத்த போகிறது.கல்வியில் இலவசத்தை தவிர்த்து அதற்கான கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள் அரசுப்பள்ளியும்,மாணவர்கள் மேன்மை அடைவர்கள்.
பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??
இந்த திட்டம் 2011-2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்த போதிலும் தமிழக  அரசுப்பள்ளியில் மட்டும் கணினிப்பொறி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது அரசு.
     கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம்    மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது.ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785 ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.
தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100%  அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.
புதுவை அரசுப்பள்ளி இன்று 99.74%கணினி பள்ளி:
       2016 ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய திட்டம் இன்று இரண்டே வருடத்தில்    அரசுப்பள்ளி அனைத்திலும் அதிநவின கணினி ஆய்வகம் அமைத்து 99.74 இலக்கை அடைந்துள்ளது..
கேரளம் கணினி கல்வியில் முதலிடம்:
      கேரள அரசு கணினி கல்வியும் ,கணினி வழிக்கல்வியும் வழங்கி வருகின்றது.2011-2012ஆம் ஆண்டில்   தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகமானது அதில் 6-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரப்பட்டது. அந்த திட்டமும் ஆச்சி மாற்றத்தில்  கானல் நீரானது அச்சிடப்பட்ட புத்தகமோ குப்பை தொட்டியில் உருங்கும் நிலையை உருவாக்கிவிட்டது அரசு.அதற்கு பின் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்த கேரள அரசு இன்று இந்தியா அளவில் கணினி அறிவியல் கல்வி வழங்குவதில் முதல் மாநிலமாக உள்ளது.
2016-2017ஆண்டு அறிக்கை:
     கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
2018 ஆண்டு மத்திய அரசு தகவல்:
 (கேரள அரசுப்பள்ளியில் 70.19%கணினிகள் உள்ளன.)
இன்று கேரளத்தில் கணினி கல்வியால் இன்று  அரசுப்பள்ளியில் இணைந்த  தனியார் பள்ளி மாணவர்கள்.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிான அந்திர தெலுங்கான கர்நாடக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால்,இன்று வரை  தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை இன்றுவரை.
ஐந்து பாடங்களை மட்டும் மாற்றினால் போதுமா ?
        CBSE, matriculation போன்ற தனியார் பள்ளிக்கு  இணையான கலைத்திட்டத்தில்  மாற்றம் உண்டா புதிய பாடத்திட்டத்தில்.
அரசுப்பள்ளி சிருடையில் மட்டுமே மாற்றம்.  கலைத்திட்டத்தில் மாற்றம் இல்லாத புதிய வரைவு பாடத்திட்டம்.பத்தாண்டுகளுக்கு முன்பே கணினி அறிவியல் பாடத்தை முதல் வகுப்பிலிருந்தே கற்றுக் கொடுக்கிறது தனியார் பள்ளிகளில்.இங்கு ஐந்து பாடத்துடன் முக்கிய பாடமாக   கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றனர் இதனுடன்  ஹிந்தி யோகா போன்ற பாடங்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் .
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஏமாற்றம்..!!!
தொடக்க கல்வியில்  ஏங்கே கணினி பாடம்?
  தொடக்கப்பள்ளியில் மாற்றம்:
முனைவர் K.S.மணி துணை இயக்குநர்  (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
வரும் கல்வியாண்டில் 3ம் வகுப்பில் புதிய பாடத்திட்டம். 3ஆம் வகுப்பில் அரசு சொன்னது போல் கணினி  அறிவியல் பாடம் கொண்டு வரவில்லை.
நடுநிலை ,உயர்நிலை கல்வியில் மாற்றம்:
        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது தவிர  அனைவரும் எதிர் பாரத்து போல் ஆறாவது பாடமாக கொண்டுவரவில்லை    இதற்கான செய்முறை பயிற்சியே  அதனை கற்பிக்க முறையான     ஆசிரியர்கள் இன்றி வெறும் பாடத்தை மட்டும் அறிவியல் பாடத்தின் ஓர்  அங்கமாக இணைத்துள்ளது .
      மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது  அரசு.
  புதிய பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம்  துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில்     மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில்  அமைந்துள்ளது.
மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்:
     2020ம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம் தனியார் பள்ளிகளில்  தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கற்கும் கணினி பாடம் 11ம் ,12 ம்  வகுப்பு பாடமாக புதிய பாடத்திட்டதில் உள்ளது தற்போதும் கூட கணினியின் வரலாறு,Windows ,word ,excel,power point.
மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும்
விரைந்து நடவடிக்கை எடுக்கமா  இனியாவது...???.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.