ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் புத்தகங்களை எதிர்பார்க்கும் மாணவர்கள்!

மதுரை : மதுரையில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பள்ளி நுாலகங்களுக்கு மாணவர், ஆசிரியர் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி நுாலகங்களுக்கு இந்தாண்டு புத்தகங்கள் வாங்க தலா 7500 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. &'ஒவ்வொரு ஆண்டும் ஒரே கம்பெனியில் பெயரளவில் புத்தகம் வாங்கி அதை மூடை கட்டி வைத்து விட்டு, நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டப்படுகிறது,&' என சர்ச்சை எழுந்துள்ளது.

இதே திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆய்வக உபகரணம் வாங்குவதிலும் இதுபோல் சர்ச்சை எழுந்தது. இதற்கு பள்ளிகளில் குழு அமைத்து சுதந்திரமாக உபகரணம் கொள்முதல் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதேபோல் நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் எவை, மாணவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்கள் என்ன என மாணவர், ஆசிரியரிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வாங்க வேண்டும். 


&'கமிஷன்&' அடிக்க ஒரே கம்பெனியில் மொத்த புத்தகங்களையும் வாங்கும் சிலர் முயற்சிக்கு கல்வி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.