கரூர் மருத்துவ கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை

கரூர்:கரூரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:சில ஆண்டுகளில், சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு என்ற பெயரை, இந்தியா பெறும் நிலை உருவாகி உள்ளது. இந்தியர்களை பயமுறுத்தும்,
சர்க்கரை நோயை முழுமையாக தீர்க்க, டாக்டர்கள் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், அனைத்து வசதி களும் உள்ளன. அரசு மருத்துவமனைகளை, பொதுமக்கள் நம்பிக்கையுடன் அணுக வேண்டும். தமிழக அரசின் காப்பீடு திட்டம், ஏழை மக்களுக்கு கைகொடுக்கிறது.கரூரில், 200 கோடி ரூபாய் மதிப்பில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டட பணிகள் நடக்கின்றன. தற்போது கூடுதலாக, 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த, ௨௦௧௯ - ௨௦ம் கல்வியாண்டில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி யில், மாணவர் சேர்க்கை துவங்கும். 150 மாணவ - மாணவியர் சேர்க்கப்படுவர்.இவ்வாறு அவர் பேசினார்.
விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்புநீலகிரியில் கூட்டு ஆய்வுக்கு திட்டம்
-ஊட்டி, மார்ச் 12-நீலகிரியின் சுற்றுச்சூழல், இயற்கை சூழலை காக்கவும், 1993ம் ஆண்டு, 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், குடியிருப்புகளுக்கான கட்டட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளிடமும், வணிக ரீதியாக கட்டட அனுமதி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான கட்டட அனுமதி குழுவிடமும் பெற உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், மாவட்டத்துக்கான கட்டட சட்டத்தை மீறி, பலரும் கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், முதற்கட்டமாக ஊட்டியில் கட்டப்பட்ட, 1,330 கட்டடங்கள் மீது நடவடிக்கை துவங்கப்பட்டது.சில கட்டட உரிமையாளர்கள் நீதிமன்ற தடையாணை வாங்கியதால், அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஊட்டி நகரில், 300 விதிமீறிய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.கட்டட விதிமீறல் மற்றும் காரணம் குறித்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக குழுவுடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.