கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக வி.ஐ.டி., பல்கலைக்கு விருது

வேலூர்: கல்வி, ஆராய்ச்சி பணிகளில் சிறந்து விளங்குவதற்காக, க்யூ.எஸ்., அமைப்பின், தேசிய அளவிலான, 'வைர விருது', வி.ஐ.டி., பல்கலைக்கழகத்துக்கு
வழங்கப்பட்டது.இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், க்யூ.எஸ்., அமைப்பு, உலக தரத்திலான, கல்வி மற்றும்ஆராய்ச்சி பணிகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களை, தேர்ந்தெடுத்து, தர வரிசை அங்கீகாரம் வழங்கி வருகிறது.இந்தியாவில், தேசிய அளவில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு, அவற்றுக்கு வைரம், தங்கம் மற்றும்வெள்ளி தரவரிசை வழங்க, முடிவு செய்தது.கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சிறந்து விளங்குவதற்காக, வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு வைர விருதுக்கான, தர வரிசை வழங்க, முடிவு செய்தது.அதைத்தொடர்ந்து, டில்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி முன்னிலையில், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்துக்கு, க்யூ.எஸ்., வைர விருது வழங்கப்பட்டது. அதை, வி.ஐ.டி., துணைத் தலைவர், ஜி.வி.செல்வம் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், நாக் அமைப்பின் தலைவர், வீரேந்தர் எஸ்.சவுகான், க்யூ.எஸ்., அமைப்பின் இயக்குநர், பென் சொட்டர்,க்யூ.எஸ்., ஐரோப்பா பவுன்டேஷன் தலைமை செயல் அலுவலர், அஸ்வின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.