ஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு

வங்கி கணக்கு, மொபைல் போன் எண் ஆகியவற்றை ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



'மொபைல் போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, மொபைல் போன், வங்கி கணக்கு மற்றும் பல்வேறு சமூக நல திட்டங்களை பெறுவதற்கான கடைசி நாள் 2018 மார்ச் 31 ம் தேதி என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொபைல் போன் , வங்கி கணக்கு மற்றும் சமூகநல திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் வழக்கின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது