2018-19ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

சென்னை: வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
2.30 மணி நேர பட்ஜெட் உரை நிறைவு பெற்றது. மாலை 3.30 மணிக்கு காவிரி சிறப்பு கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

முன்னதாக இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடரை அவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார் ஓ. பன்னீர்செல்வம்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
1.09: உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,03,219 ஆக இருந்த போதிலும், இது தமிழகத்தில் ரூ.1,53,263 ஆக உள்ளது.

சமூக பொருளாதார மாற்றத்துக்கு தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.

****
01.05: வரும் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14,45,227 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.16,89,459 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய வரிகளின் பங்கு ரூ.31,707கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளுக்கு ரூ.52,171 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கு ரூ.25,362 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.11,301 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.6,211 கோடியாக இருக்கும்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,12,616 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆயத்தீர்வை வருவாய் ரூ.6,997 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.
மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.98,689 கோடியாக உள்ளது. இது வரும் நிதியாண்டில் ரூ.1,12,616 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் ரூ.10,935 கோடியாக இருக்கும்.
வருவாய் பறற்றாக்குறை ரூ.17,490 கோடியாக இருக்கும்.
மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,76,251 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
***
12.49: 1000 கி.மீ சாலைகள் அகலப்படுத்தப்படும்.

பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டப் பணிகள் ரூ.1,244.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.

அம்ருத் திட்டத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு

எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.50 கோடியாக உயர்வு.

அரசு மருத்துவமனைகளில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் பொருத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.545 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
****
12.36 : அம்மா தாய் - சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்துக்கு ரூ.1,001 கோடி நிதி.
நபார்டு வங்கி உதவியுடன் ரூ.200 கோடி செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டாய கல்வித் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி
உயர்கல்வித் துறைக்காக ரூ.4,620 கோடி ஒதுக்கீடு.
சென்னை மாநில கல்லூரி விடுதி, ராணி மேரி கல்லூரி கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.
****
12.24: ரூ.24 கோடி ரூபாய் செலவில் பொன்னேரி, நசரத்பேட்டையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 17 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய மகப்பேற்று இறப்பு விகித அளவு ஒரு லட்சத்துக்கு 62 ஆகக் குறைந்துள்ளது.

சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம்., திருவாரூர், குமரி, தேனியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்கள் ரூ.48 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4000 மதிப்பில் அம்மா தாய் - சேய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
***
12.16: அனைவருக்கும் வீடு வசதி திட்டத்துக்கு ரூ.2,301 கோடி ஒதுக்கீடு. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

சென்னை விரிவாக்கப் பகுதிகளில் ரூ.604 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம்.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.300 கோடி.

நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.600 கோடி.

குடிநீர் வழங்கல் பணிகளுக்கு ரூ.1853 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்.

விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும்.
***
12.08: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலத்திட்டங்களுக்கு ரூ.109.42 கோடி ஒதுக்கீடு.

சமூக நலத்துறைக்கு ரூ.5,611 கோடி ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.988 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.973 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ.15 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.

ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.
•••
12.02: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் தொழில் செய்வதை எளிமைப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற சாலைத் திட்டப் பணிகளுக்கு ரூ.1,244 கோடி நிதி ஒதுக்கீடு.

அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறை

கடந்த 2017-18ம ஆண்டில் ரூ.10,067 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.11,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட ரூ.1,006 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதலீட்டு மானியம் ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
***
11.55: உதய் திட்டத்துக்கான கடனை சரிகட்ட மின்சார வாரியத்துக்கு தமிழக அரசால் ரூ.4,563 கோடி மானியம் வழங்கப்படும்.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீடு.
***
  • 11.48: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
  • உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.
  • விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.
  • குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.
  • 54 கி.மீ. மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ. மாவட்ட சாலைகள் ரூ.80 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.
***
11.38: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.
கோவையில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி எடுக்கப்படும்.
உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

****
11.31: 2018-19ம் நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை நடைமுறைப்படுத்தப்படும்.

செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி செலவில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.

விவசாயிகளின் வருவாயை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்த ரூ.715 கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்படும்.

குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்.
****
11.23: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் ரூ.35 கோடி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு.

மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பு உதவி பெறும் நபர்களின் எண்ணிக்கை 1,000 பேரில் இருந்து 2,000 பேராக உயர்வு.

தமிழகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.

மகளிர் சுகாதார திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.

சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ.5,611.62 கோடி ஒதுக்கீடு.
***
11.19: நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையால் 2017-18ம் ஆண்டு கணிக்கப்பட்டதை விட டாஸ்மாக் வருவாய் குறைந்துள்ளது.
தமிழ் மொழி விரிவாக்க மையம்
11.14: தமிழ் மொழி விரிவாக்க மையம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும். தமிழ்மொழி விரிவாக்க மையத்துக்கு ஆண்டு மானியமாக ரூ.2 கோடியை தமிழக அரசு வழங்கும்.
தமிழக அரசின் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
2018-19ம் நிதியாண்டில் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு இலவசமாக வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.
***
காவல்துறை, தீயணைப்பு, நீதித் துறைக்கான அறிவிப்பு
11.06 : காவல்துறை பயன்பாட்டிற்காக 15 காவல்நிலைய கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் கட்டித்தரப்படும்.
மணலியில் ரு.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.347 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறைத் துறைக்கு ரூ. 306 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காவல் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை இந்த அண்டு முதல் உயர்த்தப்படும். 1,500 காவலர் விருதுகள் இந்த ஆண்டு முதல் 3000 ஆக உயர்த்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,197.95 கோடி ஒதுக்கீடு.
நீதிமன்றங்களின் கட்டுமானப் பணிக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு.
பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் இணையதளம் விரைவில் தொடங்கப்படும்
மானியம், உதவித் தொகைக்கு ரூ.75,723 கோடி ஒதுக்கீடு.
மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.20,627 கோடியாக இருக்கும்.
***
கடந்த ஆண்டை விட பற்றாக்குறை குறைவு
10.51: தமிழக அரசின் வருவாய் - ரூ.1.81 லட்சம் கோடி
தமிழக அரசின் மொத்த செலவு - ரூ.2.04 லட்சம் கோடி
வரும் நிதியாண்டில் பற்றாக்குறை - ரூ.23 ஆயிரத்து 176 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.17 ஆயிரத்து 490 கோடி பற்றாக்குறை பட்ஜெட் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது.

***

டாஸ்மாக் வருவாய் சரிவடைந்துள்ளது.

2018-19ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

***

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் திறக்கப்படும்.
தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.750 கோடி நிதி வழங்கப்படும்.