1 லட்சம் பணி இடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்!

ரயில்வேயில், ஒரு லட்சம் காலி பணி இடங்களுக்கு, இரண்டு கோடி பேர் விண்ணப்பித்து உள்ளதாக, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரியம், சமீபத்தில், தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு, 17,849 பேர், பல்வேறு தொழில்நுட்பப் பணிக்கு, 9,170 பேர், குரூப் - டி பணிகளுக்கு, 62,907 பேர் என, மொத்தம், 90 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இந்நிலையில் நேற்று, ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுவரை, இரண்டு கோடிக்கு மேற்பட்டோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பிக்க, இன்னும் ஐந்து நாட்கள் அவகாசம் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
நாடு முழுவதும், இத்தேர்வுக்கான வினாத்தாள்கள், தமிழ், ஹிந்தி, உருது, மலையாளம் உள்ளிட்ட, 15 மொழிகளில் அச்சிடப்படுகின்றன.