Breaking News : G.O Ms : 56 - தேவையற்ற உபரி அரசுப் பணியிடங்களை கண்டறிந்து களைய குழு அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு

CLICK HERE-Constitution of Staff Rationalisation Committee – Appointment of Chairman and Terms of Reference – Orders – Issued.

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில்
அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் செலவுகளை குறைக்கும் வகையில் எந்தெந்த பணிகளை நீக்கலாம் என்று குழு கண்டறிந்து அறிக்கை அளிக்கும். தனியார் நிறுவனம் மூலம் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பதையெல்லாமும் ஆய்வு செய்ய குழுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவுட்சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும். அரசுப் பணியாளர்களுக்காக செலவுசெய்யப்படும் தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.