'பிளாஸ்டிக் கப்'பில் வேக வைக்கப்படும் இட்லி... புற்றுநோய், மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் விழிப்புணர்வும் நடவடிக்கையும் அவசியம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில உணவகங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில், 'பிளாஸ்டிக் கப்' பயன்படுத்தி, இட்லி வேக வைக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. 'பிளாஸ்டிக் கப்' இட்லியை உண்பதால், பெண்களுக்கு மார்பக
புற்றுநோயும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக்
கப் பயன்படுத்தி, இட்லி தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கையும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், பெரும்பாலான மக்கள், காலை மற்றும் இரவு உணவாக, அரிசி - உளுந்து இரண்டையும் அரைத்து தயாரிக்கப்படும், இட்லியை விரும்பி உண்கின்றனர். உலகின் மிகச் சிறந்த
உணவுகளில் ஒன்றாக, இட்லி கருதப்படுகிறது.

இந்த உணவு, பிற மாநிலங்களை மட்டுமில்லாமல், வெளி நாடுகளிலும், பிரபலமாகி வருகிறது. பலரின் உணவு பட்டியலில், நீங்கா இடம் பெற்றுள்ள இட்லி, உணவகம் மற்றும் திருமணம் உட்பட, பல்வேறு விழாக்களில் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ளது.