ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு

மத்திய அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின், நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, 10 பல்கலைகளில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசின் பொது
நுழைவு தேர்வான, 'கியூசெட்'டில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இந்த தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய அரசு சார்பில், ராஜஸ்தான் மத்திய பல்கலை நடத்துகிறது. தேர்வுக்கான பதிவுகள், www.cucetexam.in என்ற, இணையதளத்தில் துவங்கியுள்ளன.தேர்வுக்கு, மார்ச், 26 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 25ல், தேர்வு முடிவை வெளியிட, ராஜஸ்தான் மத்திய பல்கலை திட்டமிடுள்ளது. திருவாரூரில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலையில், இளநிலை முதல், பிஎச்.டி., வரை, 60க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், வரும் கல்வி ஆண்டில் சேர, கியூசெட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விபரங்களை, http://cutn.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல், பெங்களூரு, அம்பேத்கர் பொருளியல் கல்லுாரியிலும், கியூசெட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.