பலரின் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்காத ஏர்செல்.. உண்மையான காரணம் என்ன!

ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை, அதிகாரிகள் விளக்கம்!- வீடியோ சென்னை: ஏர்செல் நிறுவனம் பலரின் சிம் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த
இரண்டு நாட்களாக யாருக்கும் எடுக்கவில்லை. இந்தியா முழுக்க இத பிரச்சனை இருக்கிறது. இதனால் பலரும் அந்த நிறுவனம் மூடப்பட போகிறது என்று கூறினார்கள். பலரும் தங்கள் சிம்மை போர்ட் செய்யவும் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.
மாற முயற்சி
சேவை நிறுத்தம் கடந்த டிசம்பர் 1ம் தேதி டிராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேஷ், மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் ஏர்செல் சேவை நிறுத்ததப்பட்டது. ஜனவரி 30ல் இருந்து இது நடைமுறைக்கு வந்தது
மூடல் இல்லை
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். டவர் நிறுவனம் ஒன்றுடன் ஏர்செல்லுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இப்பொது செயல்படவில்லை.
காரணம் இதுவரை அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற 15 லட்சம் பேர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் 90 சதவீத மக்களின் கோரிக்கையை அந்நிறுவனம் இன்னும் ஏற்கவில்லை. நிறைய பேர் விண்ணப்பித்து இருப்பதால் கோரிக்கையை ஏற்க தாமதம் ஆகிறது என்றுள்ளனர்.
மாற முயற்சி ஆனாலும் அந்த நிறுவனத்தை விட்டு பல வாடிக்கையாளர்கள் மாற முயற்சித்து இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் பலர் இதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால் இதில் பலரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.