வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.. மாத சம்பளதாரர்கள் பெரும் ஏமாற்றம்

மத்திய பட்ஜெட் 2018-2019 டெல்லி: வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வரி செலுத்துவோரிடையே ஏற்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2018-2019) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். மோடி அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களையும், அடுத்து நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் மக்களை கவரும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. வருமான வரிக்கான உச்சவரம்பு செய்திகள் சுருக்கமாக யுவா முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை! யுவா முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை! பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்-4! பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்-4! விவசாயிகளுக்கு ''அச்சே தின்''.. பட்ஜெட்டில் அதகளப்படுத்தும் அருண் ஜெட்லி..! விவசாயிகளுக்கு ''அச்சே தின்''.. பட்ஜெட்டில் அதகளப்படுத்தும் அருண் ஜெட்லி..! வருமான வரிக்கான உச்சவரம்பு இந்த முறை இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் சேர்த்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பயனடைய வாய்ப்பு பயனடைய வாய்ப்பு தற்போது உள்ள வரம்பில் ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் என்றாலும் அந்த ஆயிரத்துக்கான வரியை செலுத்தியே தீர வேண்டும். ஒரு வேளை உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்ந்தால் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பாக அமையும் என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது. மாத ஊதியதாரர்கள் பாதிப்பு மாத ஊதியதாரர்கள் பாதிப்பு ஆனால் தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இதனால் மாத சம்பளக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு ஊதியம் ரூ.2.5 லட்சம் இருந்தால் வரி இல்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சமாக இருந்தால் 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 20 சதவீதம் வரியும், ரூ10 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. நிரந்தர கழிவு தொகை ரூ40 ஆயிரம் செய்திகள் சுருக்கமாக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்-3! பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்-3! விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு... ஜேட்லி அறிவிப்பு! விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு... ஜேட்லி அறிவிப்பு! ஸ்னாப்டிராகன் 660 & ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களமிறங்கும் நோக்கியா 7 பிளஸ்.! ஸ்னாப்டிராகன் 660 & ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களமிறங்கும் நோக்கியா 7 பிளஸ்.! நிரந்தர கழிவு தொகை ரூ40 ஆயிரம் வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவுத் தொகையாக ரூ. 40 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு இந்த ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவு தொகையை பெறலாம் என்றும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.