பள்ளி மாணவர்களுக்கு சேவை மையம்' - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி வழிகாட்டுதல், பெற்றோரின் சந்தேகம் தீர்க்கும் வகையில், ஓரிரு நாட்களில்,
சேவை மையம் துவங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இருவர், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, 11 பேர், 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த, 2,646 ஆசிரியர்களை பாராட்டி, ஈரோட்டில் நேற்று நடந்த விழாவில், சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் பேசியதாவது:பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆலோசனை, அறிவுரை வழங்கலாம். இந்தாண்டும் வெளிப்படை தன்மையுடன், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் எதிர்காலம் குறித்த, தொலைநோக்கு சிந்தனை யோடு, தமிழக அரசு செயல்படுகிறது. 


மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி வழிகாட்டுதல், பெற் றோரின் சந்தேகம் தீர்க்கும் வகையில், சேவை மையம் துவக்கப்படும். 108 போன்ற இந்த சேவை மையம், ஓரிரு நாட்களில் தமிழக முதல்வரால் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.