நாட்டா' நுழைவு தேர்வு மார்ச் 2ல் பதிவு முடிகிறது

பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், ௧௨ நாட்களே 
அவகாசம் உள்ளது.நாடு முழுவதும் உள்ள,

கட்டடவியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் சேர, 'நாட்டா' எனப்படும், தேசிய ஆர்கிடெக்சர் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 


கணித பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டும், தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். பொது அறிவு மற்றும் முக்கிய பாட அறிவு குறித்தும், வரைகலை திறன் குறித்தும், இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, கணினி தேர்வாக, ஒரு மாதம் வரை நடந்தது. 2017 முதல், தேசிய அளவில் எழுத்துத் தேர்வாக, ஒரே நாளில் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நாட்டா தேர்வு, ஏப்., 29ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, www.nata.in என்ற இணையதளத்தில், ஜன., 18ல் துவங்கியது.
இந்நிலையில், மார்ச், 2க்குள் பதிவுகள் முடித்து கொள்ளப்படும் என, தேசிய 
ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது