பிளஸ் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்க அனுமதி

'பிளஸ் 1 மாணவர்கள் இன்றுமுதல் 'ஹால் டிக்கெட்'டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மையங்களே இவர்களுக்கான மையங்களாக செயல்படும்.

இந்தாண்டு மார்ச்சில் நடக்க உள்ள பிளஸ்1 தேர்வுக்கான அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) களை இன்று (பிப். 24) முதல் மார்ச் 5 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.inஇணையதளத்திற்கு சென்று ஆன்லைன் போர்ட்டல் என்ற வாசகத்தை கிளிக் செய்து எச்.எஸ்.சி., மார்ச் / ஏப்ரல் 2018 என தோன்றும் பக்கத்தில், தங்களுக்கான யூசர் நேம், பாஸ்வேர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

தலைமையாசிரியர்கள் குறிப்பிட்ட இந்த நாட்களில் ஹால்டிக்கெடடுகளை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பதிவிறக்க நாட்கள் நீட்டிக்கப்பட மாட்டாது என, தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.