உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.


மாற்றியமைக்கப்பட விலைப்படி, விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது. சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை பேருந்து கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணம் ரூ. 22 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.