பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. அரசு போக்குவரத்து கழக பஸ்களை பொதுமக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகிறார் கள். இந்த கட்டண உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில்
போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழுப்புரம், சேலம், தஞ்சை, பாளையங்கோட்டை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

 போராட்டம் நீடித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னரும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 50 சதவித கட்டண சலுகையுடன் கூடிய பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.