மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்

ஆதார் கார்டு போல் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டு வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் நல துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே அந்தந்த மாநில அரசுகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.


இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் கார்டை போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டில் இடம் பெறும் விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு இடம் பெற்றிருக்கும்.


இலவச அட்டை


இந்த அடையாள அட்டை பெற மாற்று திறனாளிகள் ரேஷன், ஆதார் கார்டு, ஜாதி மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் கொடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தால் போதும். 


இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.அங்கு அவர்களின் புகைப்படத்துடன், முழு விபரங்களையும் பதிவேற்றம் செய்து மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்காக ஆதார் கார்டை போல் கை விரல் ரேகை, கண் விழி பதிவு செய்யும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


'மத்திய அரசின் அடையாள அட்டை பெற தனியார் கணினி மையம், நெட் சென்டர்களில் பணத்தை கொடுத்து மாற்றுத் திறனாளிகள் ஏமாற வேண்டாம்' என, அதிகா ரிகள் தெரிவித்தனர்.