தனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்

தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். 'அரசுப் பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் பயிற்சியில் ஈடுபடுத்தினால் தேர்வுப்பணிகள் பாதிக்கப்படும். அதனால் பயிற்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது' எனக் கூறி உள்ளனர்.