'ஆதார்' எண் இணைப்பு பி.எஸ்.என்.எல்., வசதி

பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் எளிதில் இணைக்க, வசதி செய்யப்பட்டுள்ளது.


மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். வரும் மார்ச்சுக்குள் இணைக்காவிட்டால், இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த சூழலில், தங்கள் மொபைல் போனில் இருந்து, அவர்களே நேரடியாக, ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு, புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.


அதை, 'ஏர்டெல், வோடபோன்' போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. ஆனால், பி.எஸ்.என்.எல்., செய்யாமல் இருந்தது. அந்த வசதியை, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, '14546' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும். அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, அது கூறும் வழிமுறைகளை பின்பற்றினால், சில நிமிடங்களில், ஆதார் எண்ணுடன், மொபைல் எண்ணை, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், இணைத்து விட முடியும்.