பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12ம் தேதி விடுமுறை தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பஸ்கள் முழு அளவில் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக்கு நீண்ட தொலைவு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.