மாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்டைகளை சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த
சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவதுமத்திய கல்வித் திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் பள்ளிகள்  முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பித்து வருகின்றன.
அதேநேரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் என்சிஇஆர்டி கவுன்சில் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்பாடத்திட்டத்தின்கீழ் முதல் வகுப்பில் 3 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.   சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றுவதில்லைஇதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களையே மாணவர்களுக்கு வழங்குகின்றனஇந்த புத்தகங்களின் விலை அதிகம் உள்ளதால் பெற்றோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புத்தக மூட்டைகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி வினியோகம் செய்யும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: என்சிஇஆர்டி பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையை அதிக புத்தகங்களை சுமக்க விடுவது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே  கடைபிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகமும் ஏற்கனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல சிபிஎஸ்இ  பள்ளிகள் இதை கடைபிடிக்கவில்லை.

மேலும், இந்த அறிவுரையை சிபிஎஸ்இயும் கடுமையாக்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விஷயத்தில் சிபிஎஸ்இ கடுமையாக நடக்க வேண்டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றாத சிபிஎஸ்இ  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி மாணவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு என்சிஇஆர்டி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை வரும் ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, சிபிஎஸ்இ பதில் தர வேண்டும்இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.