9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்பு

9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்புகார்த்திகை மாதத்தில், கன்னியாகுமரி, மழையால் பாதிக்கும் என்பதை, துல்லியமாக கணித்த ஆற்காடு
ஜோதிடர் நாராயணமூர்த்தி, வரும், 9 முதல், 12ம் தேதி வரை, நான்கு நாட்கள், சென்னை வெள்ளத்தில் மிதக்கும் எனவும், கணித்துள்ளார்.

வேலுார் மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த ஜோதிடர் நாராயணமூர்த்தி என்பவர், கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகிறார். இதில், 'இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மழை பெய்து, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆறுகளில் வெள்ளம் ஏற்படும்' என, கணிக்கப்பட்டு இருந்தது.

மேலும், கார்த்திகை மாதத்தில், கன்னியாகுமரி மழையால் பாதிக்கும்; அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் எனவும், அந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோல், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், புதிய புயல் உருவாகி கடலுார், ராமேஸ்வரம் பாதிக்கும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்த ஆண்டு உறை பனி வீசும்; முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும், விமான விபத்து ஏற்படும்; சென்னை இருளில் மூழ்கும்' எனவும், சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜோதிடர் நாராயணமூர்த்தி கூறுகையில், ''வரும், 9 முதல், 12ம் தேதி வரை, நான்கு நாட்கள், சென்னையில் பலத்த மழை பெய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கும்; மின்சாரம் இருக்காது,'' என்றார்.