Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 25, 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 17

* குறிஞ்சி, முல்லை முதலியன ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்.
* குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
* முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
* மருதல் - வயலும் வயல் சார்ந்த இடமும்

* நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
* பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்.

* பொழுது இரு வகைப்படும். ஓராண்டின் ஆறு கூறுகள். பெரும்பொழுது ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறு பொழுது.

* கார்காலம் - ஆவணி, புரட்டாசி
* குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
* முன்பனி காலம் - மார்கழி, தை
* பின்பனி காலம் - மாசி, பங்குனி
* இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
* முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி


* காலை - காலை 6 - 10 மணி வரை
* நண்பகல் - காலை 10 - 12 மணி வரை
* ஏற்பாடு - பிற்பகல் 2 - 6 மணி வரை
* மாலை - மாலை 6 - இரவு 10 மணி வரை
* யாமம் - இரவு 10 - 2 மணி வரை
* வைகறை - இரவு 2 முதல் காலை 6 மணி வரை

* திணை - பெரும்பொழுது - சிறுபொழுது
* குறிஞ்சி - குளிர்காலம், முன்பனி - யாமம்
* முல்லை - கார்காலம் - மாலை
* மருதம் - ஆறு பெரும்பொழுதுகள் - வைகறை
* நெய்தல் - ஆறு பெரும்பொழுதுகள் - ஏற்பாடு
* பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி - நண்பகல்
* புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்தினை. புறத்தினைகள் பன்னிரண்டு வகைப்படும்.
* நிரைகவர்தல் என்பது வெட்சித்திணை.
* ஆதிரைகளை மீட்டல் என்பது கரந்தைத்திணை
* மண்ணாசை காரணமாகப் போருக்குச் செல்வது - வஞ்சித் திணை
* எதிர்த்துப் போரிடல் - காஞ்சித்திணை
* மதிலைக் காத்தல் என்பது நொச்சித்திணை
* மதிலைச் சுற்றி வளைத்தல் என்பது உழிஞைத் திணை
* அதிர பொருவது என்பது தும்பைத் திணை
* வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை
* பாடாண்திணை என்பது ஆண்மகனின் ஒழுகலாறுகள் - பாடு ஆண் திணை
* வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பெதுவானவற்றைக் கூறுவது பொதுவியல்.
* ஒருதலைக் காமம் என்பது கைக்கிளை

* பொருந்தாக் காமம் என்பது பெருந்தினை கைக்கிளை இரு வகைப்படும்.
கருட்பொருள்குறிஞ்சி/மலைகாடு/முல்லைவயல்/மருதம்நெய்தல்/கடல்பாலை/வறண்ட
தெய்வம்முருகன்திருமால்இந்திரன்வருணன்கொற்றவை
மக்கள்வெற்பன், குறவர், குறத்தியர்தோன்றல், ஆயர், ஆச்சியர்ஊரன்,உழவன், உழத்தியர்சேர்ப்பன், பரதன், பரத்தியர்எயினர், எயிற்றினர்
உணவுமலைநெல், தினைவரகு, சாமைசெந்நெல், வெண்ணெய்மீன், உப்புக்குப் பெற்ற பொருள்சூறையாடலால் வரும் பொருள்
விலங்குபுலி, கரடி, சிங்கம்முயல், மான், புலிஎருமை, நீர்நாய்முதலை, சுறாவலியிழந்த யானை
பூ குறிஞ்சி காந்தல்முல்லை தோன்றிசெங்கழுநீர் தாமரைதாழை நெய்தல்குரவம் பாதிரி
மரம்அகில் வேங்கைகொன்றை, கயாகாஞ்சி, மருதம்புன்னை, ஞாழல்இலுப்பை பாலை
பறவை கிளி, மயில்காட்டுக்கோழி, மயில்நாரை, நீர்கோழி, அன்னம்கடற்காகம்புறா, பருந்து
ஊர் சிறுகுடி பாடி, சேரிபேரூர், மூதூர்பட்டினம், பாக்கம்குறும்பு
நீர்அருவி நீர், சுனை நீர்காட்டாறுமனைக்கிணறு, பொய்கைமணற்கிணறு, உவர்க்கழிவற்றிய சுளை, கிணறு
பறைதொண்டகம்ஏறுகோட்பறைமணமுழா, நெல்லரிகிணைமீன்கோட்பறைதுடி
யாழ்குறிஞ்சியாழ்முல்லையாழ்மருதயாழ்விளரியாழ்பாலையாழ்
பண்குறிஞ்சிப்பன்முல்லைப்பண்மருதப்பன்செவ்வழிப்பண்பஞ்சுரப்பன்
தொழில்தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்நெல்லரித்தல், களை பரித்தல்மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் நிரைகவர்தல், வழிப்பறி
யாப்பு
* யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள்
* செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குதலே யாப்பு எனப்படும். யாப்பின் உறுப்புகள் ஆறு.
* ஓரெழுத்து தனித்தோ, இணைந்தோ ஒலிப்பது அசை. இரு வகைப்படும்.
* அசைகள் பல சேர்ந்து அமைவது சீர் எனப்படும்
* சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்
* இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.
* அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா
* செய்யுள் இலக்கணத்தைக் கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும்.
(செய்யுள், பாட்டு, கவிதை, தூக்கு என்பன செய்யுள் என்பதன் வேறு பெயர்கள்)
* பா நான்கு வகைப்படும். சீர் நால்வகைப்படும்.
* யாப்பிலக்கணத்தில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும்.
* மெய்யும், ஆய்தமும் யாப்பில் ஒற்றெழுத்து எனக் குறிக்கப்படுகிறது.
* வெண்பாவின் ஈற்றில் அமையும் சீர் ஓரசைச்சீர் என்பர்.
* இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீராவது ஈரசைச்சீர். இது நான்கு வகைப்படும்.
* ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவிற்கு உரியவை. ஈரசைச்சீர்களை இயற்சீர் எனவும், ஆசிரிய உரிச்சார் எனவும் வழங்கப்படும்.
* மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது மூவசைச்சீர் (இது-8)
* மூவசைச்சீரில் நேரசையில் முடிவது(நான்கும்) காய்ச்சீர்கள்.
* காய்ச்சீர்கள் வெண்பாவிற்கு உரியன. ஆதலின் வெண்பா உரிச்சீர் என்பர்.
* மூவகைச்சீர்களில் நிரையசையில் முடிவது(நான்கும்) கனிச்சீர்கள்.
தொடரும்....
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment