தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற
முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தியது.
இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் தேர்வு முடிவுகள் திறம்ப பெறப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2200 பேரில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.
 
தேர்வர்களின் .எம்.ஆர். விடைத்தாள் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து,மதிப்பெண் குளறுபடிகள் ஏற்பட்ட தேர்வர்கள் தேர்வு வாரியத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் முறைகேடு தொடர்பாக 196 பேர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த , மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக . விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடு பின்னணி குறித்து தெரியவரும் என்றும் மற்ற அரசு பணி நியமனங்களிலும் ஊழல் குறையும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியள்ளார்.