இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு

சென்னை: மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று(நவ.,7) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.


வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., 30, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், சென்னையில் இன்று(நவ.,7) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வளாகத்தில் தண்ணீர் தேங்கிய, மழையால் பழுதான 9 பள்ளிகள் மட்டும் இன்று இயங்காது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர்த்து, மீதம் அனைத்துப்பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர்த்து மீதம் அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள்:

புரசைவாக்கம் - பாலர் கல்வி நிலைய துவக்கப்பள்ளிதி.நகர் - பாலமந்திர் பள்ளி, ஏ.எம்.சி., துவக்கப்பள்ளிதிருவெற்றியூர் - அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிஆவடி - நகராட்சி உயர்நிலைப்பள்ளிபுழல், மணலி செக்டார், கோலடி துவக்கப்பள்ளிராயபுரம் - கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா மேல்நிலைப்பள்ளிவேப்பேரி - டவுன்டன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிதிருவல்லிக்கேணி - லேடி வெலிங்டன் பள்ளிவேளச்சேரி - அரசு மேல்நிலைப்பள்ளிகொளத்தூர்: கல்கி ரங்கநாதன் பள்ளி