தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை,காஞ்சிபுரம்,கல்லூரி,இன்று,விடுமுறைசென்னை: தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை:

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.