'டெங்கு' இன்சூரன்ஸ் பாலிசி 'பேடிஎம் -ஆப்'பில் அறிமுகம்

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு, 'பேடிஎம்' மொபைல் ஆப்பில், இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்தாண்டில், இதுவரை, 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 52 பேர் உயிரிழந்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு, எல்.ஐ.சி., நிறுவனம் பாலிசி வசதியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், இணைய வசதி வழியாக, பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும், பேடிஎம் ஆப், டெங்கு காய்ச்சலுக்கு, தனியார் நிறுவன இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஆண்டுக்கு, 99 ரூபாய் செலுத்தி, 15 ஆயிரம் ரூபாய் வரை, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.