சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில்,
ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள்,
பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு
முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.