தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை; கடலோர பகுதிகளில் மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உக்கிரத்தைக் காட்டி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ. மழையை கொட்டியிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளக் காடாகி கிடக்கின்றன. IMD forecasts very heavy rain over TN, Puducherry புறநகர்களில் வீடுகளை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்பிருக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.