டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.