அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்

அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:
கடன் விபரம் வட்டி
சதவீதம்
வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை 5
50 ஆயிரம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை 6.50
1.50 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை 8.50
ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் 9.50
கார் வாங்க பெறும் கடன் 11
டூவீலர் கடன் 8.50
சைக்கிள் கடன் 5
கம்ப்யூட்டர் கடன் 9.50
இதர கடன் 9.50
அபராத வட்டி 2.50
அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில், வளர்ச்சி பணிகளுக்கு வழங்கும் கடன் 11
முதலீட்டு கடன் 13
கூட்டுறவு வங்கி மற்றும் நில வள வங்கி 9.50 - நமது நிருபர் -