சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று, (30 ம் தேதி ) மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார்.

மேலும் மழை காரணமாக நாளை (31 ம் தேதி ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது போல் காஞ்சிபுரம் பள்ளிகளிலும் ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நாளை முதல் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.