தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் உயருமா?

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை சம்பளம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதைத்தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்கம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.