அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரையாண்டு தேர்வை, டிச., 7ல், துவங்கி, 23ல் முடிக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு, டிச., 11ல் தேர்வு துவங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2க்கு, டிச., 7ல் தேர்வுகள் துவங்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கான தேர்வு, காலை, 10 மணி முதல், பகல், 12.15 மணி வரையும், பிளஸ் 2க்கு, காலை, 10 மணி முதல் பகல், 1.15 வரையும் நடைபெறும். 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.