பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள்,
இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், நவ.,2 முதல், நவ., 4 வரை,
முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.