'டெங்கு' பாதித்தோருக்கு ரூ.2 ,000 : சுகாதார அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை: ''டெங்குவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த
பேட்டி:வீடுகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய வற்றில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை, 48 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளில், 6 கோடியே, 23 லட்சம் ரூபாய் மதிப்பில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, டெங்குவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, இந்த திட்டத்தில், 2,000 ரூபாய் வீதம், நிதி உதவி வழங்கப்பட உள்ளது.அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து, 100 சதவீதம் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.