TNPSC "ONE TIME REGISTRATION" புதுப்பிப்பு எப்படி?

வணக்கம் சகோதர-சகோதரிகளே,
ஒன் டைம் ரெஜிஸ்டரேஷன் புதுப்பிப்பு எப்படி?
TNPSC யின் எத்தகைய தேர்விற்கும் விண்ணப்பம் செய்வதற்கு முன்பு, ஒரு முறை நிரந்தர பதிவு என்ற கணக்கினைத் தொடங்க வேண்டும். அதன் மூலமே, நீங்கள் விரும்பிய தேர்விற்கு தனியாக விண்ணப்பம் செய்ய முடியும். ஒரு முறை நிரந்தர பதிவு இல்லாமல் நேரடியாக எந்த தேர்விற்கும் விண்ணப்பம் செய்ய இயலாது.
இந்த ஒரு முறை நிரந்தர பதிவின், ஆயுட் காலம் என்பது 5 ஆண்டுகள் ஆகும். அந்த 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாம் பணம் கட்டி இதனைப் புதுப்பிக்க வேண்டும். அப்பொழுதே நாம் அடுத்து வரும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தற்சமயம் பெரும்பாலானோரின் சந்தேகம், ஒருமுறை நிரந்தரப் பதிவை (One Time Registration) எப்படி? புதுப்பிப்பது (RENEWAL) என்பதுதான்.
நான் TNPSC யுடன் இது பற்றி கேட்டபோது தெளிவான விளக்கம் கிடைத்தது.
உங்களின் நிரந்தரப் பதிவு காலாவதி ஆகப் போகிறது என்றால், அச் சமயம் உங்கள் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கினை (One time registration id) ஓப்பன் செய்து பார்த்தால் உங்கள் கணக்கினை ஆரம்பிக்கப்பட்ட நாள், மற்றும் அது எக்ஸ்பியரி ஆகும் நாள் இரண்டையும் தற்போது காட்டும்.
இப்பொழுது உதாரணத்திற்கு உங்கள் எக்ஸ்பியரி ஆகும் நாள் அடுத்த வாரம் (26.09.2017) என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நிரந்தர பதிவு கணக்கு எக்ஸ்பியரி ஆன மறுநாள் (30.09.2017) அதனை open செய்து பார்த்தல், RENEWAL என்ற புது பட்டன் இருக்கும். (படத்தில் காண்க)
அந்த பட்டனை அழுத்தினால், ரூபாய் நூற்றி ஐம்பது கட்ட வேண்டி OPTION வரும். அந்த பணத்தினை மட்டும் நீங்கள் கட்டினால் போதுமானது. மீண்டும் புதிதாக நிரந்தர பதிவுகணக்கிற்க்கான தகவல்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக எந்த தகவலும் கொடுக்க வேண்டாம்.
நீங்கள் புதிய புகைப்படம், மற்றும் கையெழுத்து பதிவேற்றம் மட்டும் செய்ய வேண்டும்..
புதுப்பிப்பற்கு பணம் 150 மட்டும் கட்டினால் போதுமானது. இந்த புதுப்பிப்பு என்பது முழுக்க முழுக்க பணம் கட்டுவதற்கு மட்டுமே, எனவே புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்து விட்டு, பணம் கட்டமால் விட்டு விட்டால் அது புதுப்பித்தல் ஆகாது. பணம் கட்ட வில்லை எனில், உங்கள் நிரந்தர பதிவு கணக்கானது, புதுப்பிக்கப் படாமலேயே இருக்கும்.
காலாவதி ஆகும் நாளுக்கு முன்னால் உங்களுக்கு அந்த பட்டன் தெரியாது. புதுப்பிக்கவும் முடியாது. காலாவதி தேதி முடிந்த பிறகு உங்கள் நிரந்தர பதிவு கணக்கினை சென்று பார்க்கவும்.
உங்களது நிரந்தர பதிவு தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
உங்களது நிரந்தர பதிவில் பெயர், தகப்பனார் பெயர், கல்வித் தகுதி போன்றவற்றில் ஏதேனும் மாற்ற முடியாத தவறுகள் இருந்தால் நீங்கள் இந்த முறையில் புதிப்பிக்காமல் புதிதாக நிரந்தர பதிவு கணக்கினை தொடங்குவது நல்லது.
மேலும், இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் ஒருவரது நிரந்தர பதிவு கணக்கு காலாவதி ஆக போகிறது என்றால், கவலை வேண்டாம்.
அந்த நேரத்தில், நீங்கள் எந்த தேர்விற்கும் விண்ணப்பிக்கலாம், ஒரு தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் கணக்கு, உயிர்ப்புடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
விண்ணப்பித்த பின் அது காலாவதி ஆகி விட்டாலும் அந்த தேர்வு சம்பந்தமான TNPSC யின் மற்ற நடைமுறைகளுக்கு (CV, Counselling) உங்களை அழைப்பார்கள்.
ஆனால், காலாவதி ஆகியும், புதுப்பிக்க வில்லை எனில் நீங்கள் புதிதாக எந்த தேர்விற்கும் விண்ணப்பிக்க முடியாது. அவ்வளவுதான்.
நீங்கள் உங்கள் கணக்கு முடியும் நாளினை கவனத்தில் கொண்டு புதுப்பிக்க வேண்டும், இத்தனை நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற கால வரம்பு இல்லை. புதுப்பித்தால் புதிய தேர்வுகளை தொடர்ந்து எழுதலாம், அவ்வ்ளவுதான்.